Friday, July 11, 2014

மலரும் நினவுகள்

1965 ம் வருடம் தமிழ் பட உலகிற்கு ஒரு பொற்க்காலம் எனலாம். அந்த வருடம்  வெளியான மொத்த தமிழ் படங்கள் 44. அநேகமாக எல்லா படங்களும் அற்புதுமானவை .


1965 ம் ஆண்டு வெளியான தமிழ் படங்கள்

எம் .ஜி ஆர்  நடித்தது              சிவாஜி நடித்தது                 எஸ் எஸ் ராஜேந்திரன்  நடித்தது

ஆசை முகம்                           அன்பு கரங்கள்                    ஆனந்தி

ஆயிரத்தில்  ஒருவன்              சாந்தி                                  காக்கும் கரங்கள்

எங்க வீட்டுப் பிள்ளை           நீல வானம்                         படித்த மனைவி

கலங்கரை விளக்கம்               திருவிளையாடல்               பூமாலை

தாழம்பூ                                  பழனி                               

பணம் படைத்தவன்

கன்னித்தாய்


ஜெய்சங்கர் நடித்தது              ரவிச்சந்திரன்  நடித்தது       ஜெமினி கணேசன்  நடித்தது

இரவும் பகலும்                     இதயக்கமலம்                    பூஜைக்கு வந்த மலர்

எங்க வீட்டுப் பெண்             நீ                                        வாழ்க்கைப்  படகு

குழந்தையும் தெய்வமும்                                                 வல்லவனுக்கு வல்லவன்

பஞ்சவர்ண கிளி

விளக்கேறியவள்


பிற படங்கள்

உன்னை போல் ஒருவன் --ஜெயகாந்தன்

என்னதான் முடிவு ---------A V M  ராஜன்

ஒருவிரல்

கல்யாண மண்டபம்         ஆனந்தன்

காட்டுராணி                      அசோகன்

கார்த்தீகை தீபம்               அசோகன்

சரசா  B A

தாயின் கருணை

தாயும் மகளும்

நாணல்                            K பாலசந்தர்

நீர்க்குமிழி                      K பாலசந்தர்

பணம் தரும் பரிசு          முத்துராமன்

மகனே கேள்                   ஆனந்தன்

வீர அபிமன்யு                A V M ராஜன்

வெண்ணிற ஆடை        ஸ்ரீதர்

அந்த வருடம் பிரமாண்ட வெற்றி பெற்ற படங்கள் :


எங்க வீட்டுப்  பிள்ளை

திருவிளையாடல்        

100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்

வெண்ணிற ஆடை

ஆயிரத்தில்  ஒருவன்      

சாந்தி

 வல்லவனுக்கு வல்லவன்

 இதயக்கமலம்

வாழ்க்கைப்  படகு

குழந்தையும் தெய்வமும்


மேல  காணப்பட்ட  படங்களில் குறிப்பிட்ட சில  படங்கள் இசையில் மிகவும் பேசப் பட்ட படங்கள் .

ஆயிரத்தில்  ஒருவன்

எங்க வீட்டுப் பிள்ளை

 திருவிளையாடல்                 

இதயக்கமலம்

வெண்ணிற ஆடை

ஆனாலும் மற்ற படங்களில்  ஏதனும் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள்  வெற்றி பெற்று இருக்கும்


கலங்கரை விளக்கம்               பொன் னெழில்  பூத்தது புது வானில்

பணம் படைத்தவன்               அந்த மாப்பிளை

                                               மாணிக்கதொட்டில்

                                               பவளகொடியில்


குழந்தையும் தெய்வமும்        அன்புள்ள  மான்விழி

சாந்தி                                       யார் அந்த நிலவு

பஞ்சவர்ண கிளி                      தமிழுக்கும்  அமுது என்று பெயர்

வாழ்க்கைப்  படகு                 சின்ன சின்ன கண்ணனுக்கு

                                               நேற்று வரை நீ யாரோ


வீர அபிமன்யு                        பார்த்தேன் சிரித்தேன்

 பழனி                                   அண்ணன் என்ன டா

கார்த்தீகை தீபம்                    எண்ண பறவை


இப்போது இசையில் மிகவும் வெற்றி பெற்ற படங்களை பார்போம் . முதலில் என் நினைவுக்கு வருவது ஆயிரத்தில்  ஒருவன்.   விஸ்வநாதன் இராமமூர்த்தி இசையில் மொத்தம் 6 பாடல்கள் .

1. நாணமோ

2. ஓடும் மேகங்களே

3. உன்னை நான் சந்தித்தேன்

4. ஏன் என்ற கேள்வி

5. ஆடாமல் ஆடூகின்றேன்

6. பருவம் எனது பாடல்

இதில் எது சிறந்த பாடல் என்பேன் .  நாணமோ ஒரு அற்புத டூயட் .  உன்னை நான் சந்தித்தேன் மற்றும்
பருவம் எனது பாடல் சுசீலா அம்மாவின் வைரங்கள் . ஓடும் மேகங்களே TMS அவர்களின் தத்துவ பாடல் . இன்றும் அதன் வரிகள் தற்போதைய காலகட்டத்திற்கு பொருந்தும் . திரு B R .பந்துலு  அவர்கள் தயாரித்து இயக்கயது. அவரின் முந்திய படங்களான கப்பலோட்டிய தமிழன் மற்றும் கர்ணன்  ஈட்டிய நஷ்டத்தை ஈடு செய்தது . MGR  ஜெயலலிதா சிறந்த வெற்றி  ஜோடி  என கோடம்பாக்கத்தில் அறிய பட்டது.

அடுத்து நாம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை பார்ப்போம் . என்ன ஒரு தீர்க்க தரிசனம் . நான் ஆணை யிட்டால்  என்று கூறி 1977 ம்  ஆண்டு தமிழ்நாடு முதல் அமைச்சராக அமர்ந்து விட்டார்  . குமரிப் பெண்ணின்  உள்ளத்திலே குடி இருக்க வாடகை என்ன தர வேண்டும் என்று கூறி தமிழர்களின் மனதில் நிரந்தரமா க வாலி குடி ஏறி விட்டார். இதன் இயக்குனர் சாணக்யா . இசை விஸ்வநாதன் இராமமூர்த்தி . மொத்தம் 6 பாடல்கள்



1. நான் ஆணையிட்டால்

2  கண்களும் காவடி

3  மலருக்கு  தென்றல்

4  குமரிப் பெண்ணின்

5  நான் மாந்தோப்பில்

6  பெண் போனால்


திருவிளையாடல்  1965 ம் வெளியான மற்றமொரு வெற்றி படம். சிவாஜி அவர்களின் வித வித மான தோற்றங்களுடன் நாகேஷ் அவர்களின் தருமி கதா பாத்திரம் காலத்தை வென்ற படைப்பு. இன்றளவும் எல்லா தமிழ் தொலை காட்சி அலை வரிசை யில் காணலாம். ஆனால் சற்றும் அலுக்காது. ஹேமநாத பாகவதரகா பாலையா அசத்துவார். பாலமுரளி யின் இன்று ஒரு நாள் போதுமா இன்றளுவும் நம் செவிகளில் கேட்டு கொண்டுருக்கும். வெண்கல குரலில் அவ்வை யார் K B S  அவர்களின் பழம் நீ யப்பா பாட்டு இன்றளவும் மறக்க முடியாத அமுதம்.


1. பழம் நீ யப்பா

2, இன்று ஒரு நாள் போதுமா

3. இசைத் தமிழ் நீ செய்த

4 பார்த்தல் பசு மரம்

5. பாட்டும் நானே

6.பொதிகை மலை உச்சியிலே

7. ஒன்றவனவன்

8. இல்லாதது ஒன்று இல்லை

9. வாசி வாசி

10.ஒம்  நமச்சிவாய

11.நீல சேலை கட்டிக் கொண்ட


இதயக் கமலம்  1965 ம் ஆண்டு வெளியான மற்றுமொரு வெற்றி படம். இரட்டை வேடத்தில் K .R . விஜயா  மற்றும் கலர் பட நாயகன் என்று அப்பொழுது அழைக்கப் பட்ட ரவிச்சந்திரன்  நாயகன் , நாயகியாக நடித்த வெகு ஜன மக்களை பெருதும் கவர்ந்த படம். அதன் வெற்றிக்கு விஜயா வின் நடிப்பும் அற்புதமான பாடல்களும் மிக  முக்கிய காரணம் .

1. உன்னைக் காணாத

2. மலர்கள் நனைந்தன

3. தோள் கண்டேன்

4. நீ போகும் இடம்

5. மேளத்தை மெல்ல தட்டு


P. சுசீலா வின் உன்னைக்  காணாத கண்ணும் கண்ணல்ல ஒரு மயக்க வைக்கும் மெலடி. P B ஸ்ரீநிவாஸ்  அவர்களின் தோள் கண்டேன் மற்றும் நீ போகும் இடம்  -இரண்டும் அற்புத பாடல்கள் . ஜானகி அம்மாவின் மேளத்தை மெல்ல தட்டு மாமா பாடலை அதன் இந்தி வடிவமான  ஆஷா வின் jumka பாடலுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் இந்தி யில் நையாண்டியும் சுவையும்  அதிகம் .


ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை  ஒரு நவீனகதை அம்சம் கொண்ட   படம். ஸ்ரீதர் ஒரு trend செட்டர்.. பாலு மகேந்திரா ,மகேந்திரன் போன்ற இயக்குனர்களுக்கு ஒரு முன்னோடி முற்றிலும் புது முகங்கள் நடித்தது . ஸ்ரீகாந்த் மேஜர்  சுந்தரராஜன் , ஜெயலலிதா ,நிர்மலா ,மூர்த்தி போன்ற ஒப்பற்ற கலைஞர் களை திரை உலகிற்கு தந்த படம். என்ன ஒரு அற்புத இசை அம்சம் கொண்ட படம் .  விஸ்வநாதன் இராமமூர்த்தி  நவீன கதை அம்சத்திற்கு ஏற்ப பாடல்கள் அமைத்திருப்பார்கள்.அவர்கள்  இசையில் மொத்தம்  6 பாடல்கள் .

1. அம்மம்மா
2. என்ன என்ன வார்த்தைகளோ
3. நீ என்பதென்ன
4. சித்திரமே
5. கண்ணன் என்னும்
6. ஒருவன் காதலன்

. அம்மம்மா மற்றும்  கண்ணன் என்னும் பாடல்கள் சுசீலா அம்மா வின் குரலில் ஒலிக்கும் இனிமையான பாடல்கள் . என்ன என்ன வார்த்தைகளோ சுசீலா வின் குரலுக்கு பியானோ பின்னணி இசை மெருகூட்டும். சித்திரமே மற்றும்  ஒருவன் காதலன்  P B ஸ்ரீநிவாஸ் அவர்களின் அற்புத மெலடி கள் . L R ஈஸ்வரி தனது காந்த குரலில் பாடிய கவர்ந்து இழுக்கும் மெலடி நீ என்பதென்ன.

1965 ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் இசை யில்  சிறந்த படம் எனது சாய்ஸ்  திருவிளையாடல்.